நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா ? கண்ணாடியினை பாருங்கள் - ராதிகா ஆப்தே

06 Oct, 2016 | 01:47 PM
image

நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதிலாக கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். 

பொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் உள்ளிட்டோர் நடித்த பார்ச்ட் படம் இந்தியாவில் வெளியாகும் முன்பே அதில் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி வெளியாகி இணையதளங்களில் பரவி வந்தது. 

இந்நிலையில் இது குறித்து ராதிகா செய்தியாளர்களிடம் கூறுகையில், பார்ச்ட் படத்தில் வந்த நிர்வாண காட்சிகள் வெளியானது பற்றி எனது கருத்தை கேட்கும் கேள்வியே தவறு. உங்களை போன்றவர்கள் தான் சர்ச்சையை கிளப்புவது. 

நிர்வாண காட்சி வீடியோவை நீங்கள் பார்த்துவிட்டு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். அதனால் நீங்கள் தான் சர்ச்சையை கிளப்பியது. நான் அல்ல என்று தெரிவித்துள்ளார். 

மேலும், நான் ஒரு நடிகை. என் வேலைக்கு என்ன தேவையோ அதை செய்வேன். உலக சினிமாவை பார்த்தால், வெளிநாட்டில் உள்ள நடிகை நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்தால் நீங்கள் இப்படி எல்லாம் கேட்க மாட்டீர்கள்.     

தங்களின் உடலை நினைத்து வருந்துபவர்கள் தான் அடுத்தவர்கள் உடல் மீது அக்கறை கொள்வார்கள். நாளைக்கு நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதிலாக கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள். அதன் பிறகு இது பற்றி நாம் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51
news-image

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிக்கும்...

2023-05-27 15:26:30
news-image

'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

2023-05-27 14:03:17
news-image

பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

2023-05-26 18:12:21
news-image

தீராக் காதல் - விமர்சனம்

2023-05-26 18:17:30
news-image

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்'...

2023-05-26 18:18:27
news-image

இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

2023-05-26 18:19:07
news-image

கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

2023-05-26 21:31:06
news-image

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிலம்பரசன்

2023-05-26 15:49:18
news-image

பாரதிராஜா நடிக்கும் 'மார்கழி திங்கள்' படபிடிப்பு...

2023-05-26 13:28:03
news-image

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி...

2023-05-25 17:28:45