ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 65,109 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 11,241,109 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 681  பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 27 ஆயிரத்து 448 ஆக  உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொஸ்கோவில் அதிகளவாக 18,935 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 9,722 பேரும்  மொஸ்கோ பிராந்தியத்தில் 5,769 பேரும் பதிவாகியுள்ளனர்.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 10,071,740 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.