மின்விநியோகத்தை தடை செய்யும் நோக்கில் செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - காமினி லொக்குகே

Published By: Digital Desk 3

25 Jan, 2022 | 03:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்விநியோகத்தை தடை செய்யும் நோக்கில் செயற்படும் மின்சார தொழிற்சங்கத்தினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இனி மின்விநியோகம் தடைப்படாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன். 

மின்பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே கோரிக்கைவிடுத்தார்.

மின்சாரத்துறை அமைச்சில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின் உற்பத்தி மற்றும் மின்விநியோகத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான 50 மில்லியன் டொலரை விநியோகிக்குமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கு அமைய மத்திய வங்கி தேவையான டொலரை விநியோகிக்க உரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

இலங்கை மின்சார சபை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய 93 பில்லியன் நிதி தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய வங்கிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பல்வேறு பொது காரணிகளினால் கடந்த வாரம் ஒரு சில பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் மின் நிலையம் கடந்த வாரம் செயலிழந்தது. அதனை இவ்வாரமளவில் சீர் செய்ய முடியும்.

அனல் மின்நிலையத்தின் மின்னுற்பத்தி முழுமையாக வழமைக்கு திரும்பியவுடன் எரிபொருளுடனான மின்னுற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டு எரிபொருள் சேமிக்கப்படும். நெருக்கடியான சூழ்நிலையினை முகாமைத்துவம் செய்யவே தொடர்ந்து முயற்சிக்கிறோம்.

மின்விநியோகத்தை தடை செய்யும் நோக்கில் செயற்படும் மின்சார சேவை தொழிற்சங்கத்தினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 

தேசிய மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை சீர் செய்து தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கும் வேளையில் பிறிதொரு தரப்பினர் நெருக்கடி நிலைமையினை தீவிரப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

மின்விநியோகம் இனி தடைப்படாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன். மின்பாவனையாளர்களும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

சபுகஸ்கந்த மின்நிலையத்தினதும், கொழும்பு துறைமுக பகுதியில் உள்ள மிதக்கும் மின்நிலையங்களின் மின் உற்பத்திக்கு தேவையான உராய்வு எண்ணெய் நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்ததால் தேசிய மின் கட்டமைப்பில் 168 மெகாவாட் மின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டது.

சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக பகுதியில் உள்ள மிதக்கும் மின்நிலையங்களுக்கு தேவையான 1,600 மெற்றிக்தொன் உராய்வு எண்ணெயை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று முன்தினம் விநியோகித்ததை தொடர்ந்து அந்த மின்னுற்பத்தி நிலையங்களின் பணிகள் வழமைக்கு திரும்பின.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தில் உராய்வு எண்ணெய்க்கு பதிலாக டீசலை பயன்படுத்தி மின்னுற்பத்தி நடவடிக்கையினை முன்னெடுக்க முடியும்.

தற்போதைய நிலையில் மின்விநியோகத்தை துண்டிப்பதற்கான அவசியம் கிடையாது என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56