Published by T. Saranya on 2022-01-25 14:25:26
(செய்திப்பிரிவு)
தற்காலிக வீடுகளில் வசித்து வரும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் “ உங்களுக்கு வீடு - நாட்டுக்கு எதிர்காலம் “ இக்கருத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் குடும்பமொன்றுக்கு 6 இலட்சம் உயர்ந்தபட்ச உதவித்தொகையொன்று வீடமைப்பு நிர்மாணத்தின் முன்னேற்றத்திற்கமைய வழங்கப்படும்.
இக்கருத்திட்டம் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கட்டுமானப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையால் அதனால் 6 இலட்சம் உதவித்தொகையில் எதிர்பார்க்கின்ற வகையில் வசிப்பதற்குப் பொருத்தமான முழுமையான வீடொன்றை அமைப்பதற்கு சிரமமாக அமையும்.
அதனால் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் தெரிவு செய்யப்படும் பயனாளர் குடும்பங்களுக்கு குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் உதவித்தொகையை 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.