(செய்திப்பிரிவு)

நெற் பயிர்ச்செய்கையாளர்களின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு 2021 மற்றும் 2022 பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

நெல் அறுவடையை கொள்வனவு செய்தலை நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நேரடியாகவும் மாவட்டச் செயலாளர், அரசாங்க அதிபர்களால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை இயக்குவதன் மூலமும் மேற்கொள்ளப்படும். 

அதற்குத் தேவையான 29,805 மில்லியன் நிதி ஒதுக்கீடு அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும். அதற்கமைய விவசாய அமைச்சர்  சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு 2021 மற்றும் 2022 பெரும் போகத்தில் அரசாங்கம் நெற் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் துறையினருடன் போட்டித்தன்மை மிகுந்த விலைகளுக்கு சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்வனவு செய்தல் 2021 மற்றம் 2022 பெரும் போகத்தில் நெல் அறுவடையில் குறைவு ஏற்பட்டால் அதனால் பாதிப்புக்குள்ளாகும் நெல் விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் இழப்பீட்டுத் தொகை செலுத்துதல் ஆகிய திட்டங்களை செயற்படுத்த அமைச்சரவை  அங்கிகாரம் வழங்கியுள்ளது.