11 மணிநேரமாக விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் பயணித்த நபர் உயிருடன் மீட்பு

Published By: Digital Desk 4

25 Jan, 2022 | 01:37 PM
image

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை, சரக்கு விமானம் தரையிறங்கியபோது அதன் முன்பக்க சக்கரத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை விமான நிலைள அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து விமானம் புறப்பட்டதில் இருந்து 11 மணி நேரத்திற்கும் மேலாக அந்த நபர் முன்பக்க சக்கரப் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக ஷிபோல் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த  நபர் தற்போது வரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர் 16-35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான முன்பக்க சக்கரப் பகுதியில், விமான நிலையக் குழுவினர் முதலில் ஒரு நபரைப் போல இருப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த, பொலிசார் மற்றும் அவசர சேவைகள் அந்த நபர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினர், ஆனால் அவர் குறைந்த உடல் வெப்பநிலையுடன் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

"இந்த மனிதனைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம், ஆனால் விமானம் மிகவும் குளிர்ந்த வெப்பநிலையில் 10,000 [கிலோமீட்டர்கள்] பறந்த பிறகு அவர் உயிருடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தோம்" என்று ராயல் டச்சு இராணுவ காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் ஹெல்மண்ட்ஸ் தெரிவித்தார்.

அந்த நபர் விமான நிலையத்தில் முதலுதவி  வழங்கி நிலைப்படுத்தப்பட்டு பின்னர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என ஹெல்மண்ட்ஸ் மேலும் கூறினார்.

ஜோகன்னஸ்பர்க் மற்றும் ஆம்ஸ்டர்டாம் இடையே சராசரியாக 11 மணிநேரம் ஆகும், மேலும் கென்யாவில் விமானம் நிறுத்தப்பட்டிருந்தால், பயணம் பல மணிநேரம் அதிகமாக இருந்திருக்கும் என்று இராணுவ காவல்துறை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு...

2026-06-07 12:40:35
news-image

H-1B விசா முறையை முற்றிலுமாக மாற்றியமைக்க...

2026-06-07 12:04:47
news-image

39 நாடுகளுக்கான டொனால்ட் ட்ரம்பின் 'குடிவரவுத்...

2026-06-07 10:55:46
news-image

ஈரான் சொத்துக்களை வளைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக...

2026-06-07 10:13:36
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 12...

2026-06-07 11:18:54
news-image

அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் ‘சதை தின்னும்...

2026-06-06 17:15:03
news-image

அமெரிக்க - ஈரான் போரினால் உலகளவில்...

2026-06-06 17:28:42
news-image

உலகக் கிண்ண கால்பந்து 2026: ஈரான்...

2026-06-06 14:17:49
news-image

நேரடிப் பேச்சுவார்த்தைக்கான ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார்...

2026-06-06 12:48:59
news-image

சர்வதேச விண்வெளி காற்று கசிவு: 5...

2026-06-06 11:46:43
news-image

ஆபிரிக்காவில் பரவும் எபோலாவை கட்டுப்படுத்த 6...

2026-06-06 12:10:58
news-image

உலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் !...

2026-06-06 10:24:36