(குடந்தையான்) 

முன்னெப்போதும் பார்த்திராத ஸ்டாலினாக தற்போதைய முதல்வர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது யாவரும் அறிந்ததே. 

தி.மு.க. ஆட்சி தொடங்கிய நாள் முதல் மக்களின் கவனத்தைத் தன்பாலிருந்து திசை திருப்ப விடாதிருக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். 

விரைவில் வரவிருக்கின்ற உள்ளுராட்சித் தேர்தலிலும் அவ்வாறானதொரு திட்டத்தை தடாலடியாக அமல்படுத்தியிருக்கிறார் .

எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சி, தாம்பரம், ஆவடி, கடலூர், திண்டுக்கல், வேலூர்,  கரூயலூர், விருதுநகர்,  காஞ்சிபுரம்,  மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளுக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இவற்றுள், சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி என்பன பட்டியல் இனப்பெண் உறுப்பினர்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள 200 வட்டாரங்களில் 32 வட்டாரங்கள் பட்டியல் இனத்தவர்க்கும் அவற்றுள் 16 பெண்களுக்கும் மீதமுள்ளவற்றில் 84 வட்டாரங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் இம்முறை சென்னை மாநகராட்சியை ஏராளமான பெண்வேட்பாளர்கள், பெண் பிரதிநிதிகள் அலங்கரிக்கவுள்ளனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-01-23#page-14

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/