(என்.கண்ணன்)
“சந்திரிகாவுக்குப் பின்னால், ஒரு கூட்டம் அணி திரண்டு வருவதை இரண்டு நிகழ்வுகள் புலப்படுத்தியிருக்கின்றன”
“ஷிராணியை நிறுத்தினாலும், கரு ஜயசூரியவை போட்டியிட வைத்தாலும், குமார வெல்கமவை நிறுத்தினாலும், சரி, அவர்கள் தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக எதனை முன்வைக்கிறார்கள் என்பதே முக்கியம்”
இலங்கையில் அடுத்த அரசியல் புரட்சியை ஏற்படுத்துவதற்கான தயார்படுத்தல்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அதனை நிரூபிப்பது போன்று அண்மையில் இரண்டு நிகழ்வுகள் அமைந்திருந்தன.
ஒன்று - முன்னாள் பிரதமரும், சந்திரிகாவின் தந்தையாருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் பிறந்த நாள் நிகழ்வு.

அந்த நிகழ்வில் வழக்கத்துக்கு மாறாக, சந்திரிகா குமாரதுங்கவுடன், ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், பங்கேற்றனர்.
தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தாலும், கருத்தியல் ரீதியான முரண்பாடுகளைக் கொண்ட இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட சுசில் பிரேம் ஜெயந்த, பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா, மற்றும் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டவர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
அடுத்து. சந்திரிகா குமாரதுங்கவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://mypaper.lk/