பாதிக்கப்பட்ட நெற்பயிர்ச்செய்கையாளர்களுக்கு மாத்திரம் நட்டஈடு - மஹிந்தானந்த

Published By: Digital Desk 3

25 Jan, 2022 | 12:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2021 - 2022 பெரும்போகத்தில்  நெற் பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டு விளைச்சலில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மாத்திரம் முதற்கட்டமாக நட்டஈடு வழங்கப்படும்.

அத்துடன் ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலை 75  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலைபேறான விவசாய கொள்கையினை நிலைப்படுத்த அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள தயாராகவுள்ளேன் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிலைப்பேறான விவசாய கொள்கையினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நல்ல திட்டங்களுக்கு எதிராக ஒரு தரப்பினர் வழமையாக செயற்படுவதை போன்று சேதன பசளை திட்டத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பெரும்போக விவசாயத்தில் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்ட விவசாயிகள் தாம் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெறவில்லை என கருதும் பட்சத்தில் அவர்களுக்கு நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க 40 ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

சேதன பசளையினை பயன்படுத்தி 8 இலட்சம் ஹேக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. 10 இலட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சினால் வழங்கப்பட்ட 4 வகையான சேதன பசளை மற்றும் சேதன திரவ உரம் ஆகியவற்றை மாத்திரம் பயன்படுத்தியவர்களுக்கு மாத்திரம் நட்டஈடு வழங்கப்படும் என்ற வரையறை கிடையாது. நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நட்டஈடு வழங்கப்படும்.

சோளம் மற்றும் மரக்கறி ஆகிய பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான உரம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலனா விவசாயிகள் இதர பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

ஆகவே நெற்பயிர்ச்செய்கைக்கு மாத்திரம் முதற்கட்டமாக நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31