சிட்டினியில் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 போட்டிக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான 16 வீரர்களை உள்ளடக்கிய பெயர் பட்டியலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்த அணியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப மற்றும் முன்னணி வீரரான டேவிட் வோர்னர் இணைத்துக் கெள்ளப்படவில்லை. அதேநேரம் பிக்பாஸ் போட்டியில் அசத்திய பென் மெக்டெர்மாட் உள்வாங்கப்பட்டுள்ளார்.
போட்டிகள் பெப்வரி 11 முதல் சிட்னி, கான்பெர்ரா மற்றும் மெல்போர்ன் மைதானங்களில் நடைபெறும்.
அவுஸ்திரேலிய அணி விபரம்:
ஆரோன் ஃபிஞ்ச், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் இங்கிலிஸ், பென் மெக்டெர்மாட், க்ளென் மெக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மெத்யு வேட் மற்றும் ஆடம் சம்பா.
