நெல் விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல்லினை தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த நெல் அறுவடையை கொள்வனவு செய்தல், நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நேரடியாகவும் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர்களால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை இயக்குவதன் மூலமும் மேற்கொள்ளப்படும். 

அதற்குத் தேவையான 29,805 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும். அதற்கமைய, விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.