இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான “எட்கா” ஒப்பந்தம் இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற உலக பொருளாதார சம்மேளனத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“எட்கா”  ஒப்பந்தத்தை இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திட இந்திய பிரமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.