இலஞ்சம், போதைப்பொருள் காரணமாக தடையை எதிர்நோக்கியுள்ளேன் - ப்றெண்டடெய்லர் 

25 Jan, 2022 | 10:34 AM
image

இலஞ்சம் பெற்றமைக்காகவும் கொக்கெய்ன் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமைக்காகவும் தான் தடையை எதிர்நோக்கியுள்ளதாக ஸிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் ப்றெண்டன் டெய்லர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய வியாபாரி ஒருவர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட தன்னை அழைத்த விடயத்தினை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் முறையிட தவறியதால் தனக்கு நீண்டகால தடை விதிக்கப்படும் என ப்றெண்டன் டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில் அனுசரணை என்ற பெயரில் ஸிம்பாப்வேயில் இருபது 20 தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்யவிருப்பதாகவும், 15,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் கூறி இந்திய வியாபாரி ஒருவர் டெய்லரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொக்கெய்ன் போதைப்பொருள் பாவித்திருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். 

பின்னர் அந்த குழு தான் தங்கியிருந்த ஹொட்டெலுக்கு வந்து தான் போதைப் பொருள் அருந்துவதை வீடியோவில் பதிவு செய்ததனை காட்டி தன்னை மிரட்டியகவும் டெய்லர் கூறியிருக்கின்றார்.

டெய்லரை மிரட்டிய குழுவினர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட வேண்டும் என நிர்ப்பந்தம் செய்ததாகவும் எனவே, தனது சொந்த பாதுகாப்பினை கருத்திற்கொண்டே அக் குழுவின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் முறைப்பாடு செய்யத் தவறியதால் தனக்கு நீண்டகாலத் தடை விதிக்கப்படும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த வருடம் ஓய்வுபெற்ற 35 வயதான ப்றெண்டன் டெய்லர் 205 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 34 டெஸ்ட் போட்டிகளிலும், 45 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35