கமரூன் தலைநகரில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆபிரிக்க நாடுகளுக்கான கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் சுமார் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக கேமரூன் அரச ஒளிபரப்பு சேவைகள் தெரிவித்துள்ளன.
கேமரூன் மற்றும் கொமரோஸ் இடையேயான போட்டியைக் காண ரசிகர்கள் தலைநகர் யாவுண்டேவில் அமைந்துள்ள ஒலெம்பே மைதானத்தை அணுக முயன்றபோதே இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை ஆபிரிக்க நாடுகளுக்கான கால்பந்து கிண்ணத்தை ஏற்பாடு செய்யும் 'ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பு' (CAF) இந்த சம்பவம் குறித்து கவலை அடைந்துள்ளதுடன், சம்பவம் குறித்து மேலதிக விபரங்களை திரட்டி வருகின்றது.
ஜனாதிபதி பால் பியா இந்த சம்பவம் குறித்து ஆழமான விசாரணைக்கு உத்தரவிட்டார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.