மேற்கு ஆபிரிக்க நாடான புர்க்கினா பாசோவில் உள்ள இராணுவம் ஜனாதிபதி ரோச் கபோராவை வீழ்த்தி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இராணுவ அதிகாரி ஒருவரால் அரச தொலைக்காட்சியில் திங்களன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவர் அந்த தொலைக்காட்சி அறிவிப்பில், இராணுவம் ஜனாதிபதி ரோச் கபோரை பதவி நீக்கம் செய்ததாகவும், அரசியலமைப்பை இடைநிறுத்தியதாகவும், அரசாங்கத்தையும் தேசிய சட்டமன்றத்தையும் கலைத்ததாகவும், நாட்டின் எல்லைகளை மூடிவிட்டதாகவும் கூறினார்.

அத்துடன் கையகப்படுத்தல் வன்முறையின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும், தடுத்து வைக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே ஜனாதிபதி ரோச் கபோர் எங்கே இருக்கிறார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.