ஜனாதிபதி தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவேண்டும் - அஸாத் சாலி 

By T Yuwaraj

24 Jan, 2022 | 08:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவேண்டும்.

இலங்கை வரலாற்றில் தற்போதைய அரசாங்கம் போல் எந்த அரசாங்கமும் மக்களால் வெறுக்கப்படவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

பொய்களை கூறி காலத்தை கடத்தும் புதிய அரசாங்கம் - அஸாத் சாலி | Virakesari.lk

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து பல கட்சிகள் ஆட்சி செய்துவந்திருக்கின்றன. ஆனால் எந்த கட்சியினாலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல்போயிருக்கின்றன.

தற்போதைய கோத்தாபய ராஜபக்ஷ்வின் அரசாங்கம் கடந்த 2வருடத்தில் அவர்களின் வேலைத்திட்டம் பெய்லாகி இருக்கின்றது. வரலாற்றில் எந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கம்போல் மக்களால் வெறுக்கப்படவில்லை. அந்த அளவுக்கு மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

அத்துடன் சிறிமா அம்மையாரின் ஆட்சியில் மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் இருந்தார்கள். அன்று மக்களுக்கு பெற்றுக்கொள்ள பொருட்கள் இருந்தன.

ஆனால் இன்று மக்கள் பொருட்கள் வந்தால் பெற்றுக்கொள்ளவே வரிசையில் இருக்கின்றனர். சில நேரங்களில் காலையில் இருந்து வரிசையில் இருந்தாலும் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. 

சதொச நிறுவனத்தில் அனைத்து பொருட்களும் இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கின்றார். ஆனால் சதொச நிறுவனத்துக்கு சென்றுவரும் மக்கள், தேவையான பொருட்கள் இல்லை என்ற தெரிவிக்கின்றனர்.

மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் காஸ் சலிண்டர் எந்த நேரம் வெடிக்கும் என்ற அச்சத்தில்  மக்கள் தங்களின் வீடுகளில் கூட நிம்மதியாக இருக்க முடியாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்நிலையில் கொவிட் நிலை காரணமாக கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு கடந்த 2வருடங்கள் நாட்டை முன்னேற்ற முடியாமல்போனதால் மேலும் 2வருட காலம் அதிகமாக வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு கேட்பதற்கு இவர்களுக்கு வெட்கம் இல்லையா என்றே நாங்கள் கேட்கின்றோம்.

அத்துடன் கொவிட் தொற்று உலகளாவிய பிரச்சினையாகும். இ்ந்த தொற்றுக்கு அனைத்து நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இலங்கை மாத்திரமே பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. ஆசிய வலயத்தில் வேறு எந்த நாடும் கொவிட் காரணமாக பொருளாதார ரீதியல் பாதிக்கப்படவில்லை. 

பிரதேச சபையில் கூட இருக்காத ஒரு தலைவரே நாட்டின் தலைவராக இருப்பதே இதற்கு காரணம். அவ்வாறானதொரு தலைவரையே 69இலட்சம் மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள். மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர். அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே தற்போது இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என தெரிவிக்கின்றனர்.

எனவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு, அனைத்து கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு, நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இந்த அரசாங்கத்துக்கு நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல எந்த வேலைத்திட்டமும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 42.9...

2022-12-01 16:29:27
news-image

தள்ளி விடப்பட்டதால் காயமடைந்த களுத்துறை பிரதேச...

2022-12-01 18:37:10
news-image

மின்சாரக் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்தவும்...

2022-12-01 16:26:37
news-image

தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி...

2022-12-01 16:21:19
news-image

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம்...

2022-12-01 16:14:47
news-image

மின் விநியோகத்தை தடைசெய்தால் 3 இலட்சத்துக்கு...

2022-12-01 15:40:17
news-image

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை இன்னமும்...

2022-12-01 15:30:01
news-image

56.8 சதவீதமான மக்கள் இலங்கையை விட்டு...

2022-12-01 15:33:08
news-image

ரயில்களின் தாமதத்தைத் தடுக்க நேரத்தை மாற்றுவதால்...

2022-12-01 14:52:32
news-image

இன்று முதல் 100,000 க்கும் மேற்பட்ட...

2022-12-01 14:28:18
news-image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் டக்ளஸ்,...

2022-12-01 14:43:12
news-image

வட்டவான் இறால் பண்ணை புதிய வருடத்தில்...

2022-12-01 14:12:32