(சசி)

மட்டக்களப்பு வாவியில் கடந்த 10 நாட்களாக முதலையொன்று இறந்த நிலையில் மிதப்பதாகவும் அதனை அகற்றுவதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டு வாவியில் முதலைகளின் வருகை  அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட் க்களாக ஒரு முதலை  இறந்து கரையொதிங்கியுள்ள நிலையில் இன்று ஒரு மீனவர் பலியெடுக்கப்பட்டுள்ளார்.

இறந்த முதலையை இதுவரைக்கும் கரையில் எடுத்து  புதைப்பதற்கு  மாநகரசபையால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் இதன் காரணமாக முதலைகள் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பிரதேசம் பூராவும் துர்நாற்றம் வீசும் நிலையில், மக்களின் வீடுகளுக்குச் சென்று சுகாதாரம் தொடர்பாக பரிசோதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.