(ஏ.என்.ஐ)

மனித உரிமை மீறல்களுக்காக 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி ஆஸ்திரியாவில்  எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரியாவில் உள்ள திபெத்திய சமூகம் மற்றும் உய்குர் சங்கமும்  இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்த எதிர்ப்பு பேரணியில் 30-40 திபெத்தியர்கள் மற்றும் உய்குர்கள் கலந்துக்கொண்டனர். திபெத்தில் கலாச்சார இனப்படுகொலையை நிறுத்துங்கள், திபெத் திபெத்தியர்களுக்கு சொந்தமானது, பெய்ஜிங் 2022 ஒலிம்பிக் உறுதிமொழி வேண்டாம்' என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆரப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் ஆஸ்திரியாவில் உள்ள திபெத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு மனித உரிமை மீறல்களையும் அட்டூழியங்களைச் செய்தது என்பதைக் காட்டும் நாடகத்தை நடத்தினர்.

சீன அரசாங்கம் 2008 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான உரிமையை ஒலிம்பிக் இலட்சியங்களுக்கு ஏற்ப அதன் மனித உரிமை செயல்திறனை மேம்படுத்த உறுதிமொழிகளை பெற்றது. இருப்பினும், வாக்குறுதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை, மாறாக திபெத்தில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.