2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதினை இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் வென்றுள்ளார்.

Image

31 வயதான ஜோ ரூட், விருதுக்கான ஓட்டப் பந்தையத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன், இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரை தோற்கடித்து இந்த விருதினை வென்றுள்ளார்.

ஜோ ரூபட் 2021 ஆம் ஆண்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்களுடன் 1708 ஓட்டங்களை குவித்துள்ளார்.