நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி பின்வரும் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்:
- குழு ஏ: 17:30 முதல் 18:30 வரை
- குழு பி : 18:30 முதல் 19:30 வரை
- குழு சி : 19:30 முதல் 20:30 வரை
- குழு டி: 20:30 முதல் 21:30 வரை
இலங்கையில் உள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாதுள்ளது.
இந் நிலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
மின்வெட்டு தொடர்பான நேரம், பகுதிகளை இங்கே அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்