நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்திலும், நீதிமன்ற வீதியிலும், இனந்தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு ! | Virakesari.lk

இந்நிலையில், குடபடுவ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 65 வயதுடைய நபருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் 4 அடி மற்றும் 6 அங்குல உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, நீர்கொழும்பு நீதிமன்ற வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 75 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்படுகிறது.

அந்த நபர் 4 அடி மற்றும் 5 அங்குல உயரம் கொண்டவர் என நம்பப்படுவதாகவும், கடைசியாக வெள்ளை நிற சாரம் மற்றும் வெள்ளை நீண்ட கை சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.