நடேஸ்பிரியா குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசா பெறுவதை தடுப்பது நடைமுறைரீதியாக நியாயமற்ற விடயம் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடேஸ் குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசாக்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பதை தடுப்பதற்காக உள்துறை அமைச்சர் அலக்ஸ் ஹாக் கடந்த வருடம் ஜூன் மாதம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி எடுத்த முடிவை நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு தந்தை தாய் -மகள் மூவரும் பேர்த்தில் சமூக தடுப்பில் வாழ்வதற்கான அனுமதியை உள்துறை அமைச்சர் வழங்கியிருந்தார்.

அதேவேளை உடல்நலம்பாதிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ்தீவிலிருந்து பேர்த்கொண்டு வரப்பட்டஇளையமகள் தர்ணிகாவிற்கு மருத்துவகிசிச்சை வழங்கப்பட்டது.
எனினும் ஜூன் மாதம் 15 ம்திகதி தமிழ் குடும்பத்திற்கு அனுப்பியகடிதத்தில் அவர்கள் மீண்டும் பிரிட்ஜிங் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

பிரியா நடேஸ் கோபிகா மூவரினதும் பிரிட்ஜிங் விசாக்கள் அடுத்த செப்டம்பரில் முடிவடைகின்றன. எனினும் நான்கு வயது தருணிகாவிற்கு விசா வழங்கப்படவில்லை . குடும்பத்தினர் இன்னமும் சமூக தடுப்பிலேயே வாழ்கின்றனர்.
தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழ் குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அவர்களின் சட்டத்தரணி கரீனா போர்ட் தெரிவித்துள்ளார்.