இணையத்தினூடாக மீள்நிரப்பல் வசதியை வழங்குவதற்கு HUTCH - சம்பத் வங்கி ஒன்றிணைவு

Published By: Priyatharshan

06 Oct, 2016 | 11:58 AM
image

இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்பான HUTCH, Sampath Vishwa மூலமாக தற்போது இணையத்தை உபயோகித்து மீள்நிரப்பல் செய்வதற்கு தனது வாடிக்கையாளர்களுக்கு இடமளித்து, அவர்களுக்கான சௌகரியத்தை மேம்படுத்தியுள்ளது.

Hutch வாடிக்கையாளர்கள் ஏற்கனவே கொண்டுள்ள இணையத்தினூடாக மீள்நிரப்பல் செய்யும் வசதிக்கு மேலதிகமாக இது அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பத் வங்கியின் பன்முக வசதிகள் கொண்ட இணைய தளமேடையான Sampath Vishwa, வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் வாழ்க்கைமுறையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒட்டுமொத்தமான இணையத்தள வங்கிச்சேவை அனுபவத்தை வழங்குகின்றது.

கணக்கு விபரங்களைப் பெற்றுக்கொள்ளல், பணப்பரிமாற்றம், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள், எவ்விதமான தொலைபேசியினூடாகவும் இணையத்தளத்தினூடாக பணப்பரிமாற்றம் செய்யும் வசதியாக முதன்முதலில் அறிமுகமான Mobile Cash போன்ற பல்வேறு சேவைகள் இதில் அடங்கியுள்ளன.

இப்புதிய வசதியின் அறிமுகம் தொடர்பில் HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா கருத்துத் தெரிவிக்கையில்,

“பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் வழிமுறைகளை HUTCH தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளது. இணையத்தளத்தினூடாக கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடன்ஃடெபிட் அட்டைகளை உபயோகிப்பதில் அனைவரும் சௌகரியத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

ஆகவே, இப்புதிய முயற்சியின் மூலமாக சம்பத் வங்கியில் கணக்கினை வைத்திருக்கின்ற HUTCH வாடிக்கையாளர்கள், Sampath Vishwa வசதியினூடாக தமது மொபைல் கணக்கிற்கு இணையத்தின் மூலமாக மீள்நிரப்பல் செய்யவோ அல்லது அதற்கான கொடுப்பனவை மேற்கொள்ளவோ வாய்ப்புக் கிடைத்துள்ளது”.

இப்புத்தாக்க முன்னெடுப்பின் அறிமுகம் தொடர்பில் சம்பத் வங்கியின் புதிய தகவல் தொழில்நுட்ப வியாபார மேம்பாட்டிற்கான உதவிப் பொது முகாமையாளரான ராஜேந்திர ரணசிங்க குறிப்பிடுகையில்,

“பரந்துபட்ட சேவைகள் மற்றும் கொடுக்கல்வாங்கல்களுடன் தொழிற்துறை டிஜிட்டல்மயமாகி வருகின்ற இக்காலகட்டத்தில் நாட்டிலுள்ள முன்னணி கைத்தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்கல் நிறுவனங்களுள் ஒன்றுக்கு Sampath Vishwa சேவைகளை வழங்குவதையிட்டு சம்பத் வங்கி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

ஒருவர் தனது மொபைல் தொலைபேசிக்கு மீள்நிரப்பல் செய்தல் போன்ற மிகவும் அடிப்படையான அன்றாடத் தேவைகளை மேற்கொள்ளும் சௌகரியத்தை வழங்குகின்ற HUTCH உடனான இப்பங்குடமைரூபவ் சம்பத் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகுந்த சௌகரியத்தையும் புத்தாக்கமான தீர்வுகளையும் வழங்கவேண்டும் என்ற எமது இலக்குகளை எதிரொலிக்கச் செய்யும் வகையில் வங்கியின் சேவைகளை நீட்டிக்க இடமளித்துள்ளது”.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03