வெலிகம கடலில் நீராடச் சென்ற இரு சிறுமிகள் மாயம் - அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியும் யுவதியும் மீட்பு 

Published By: Digital Desk 4

24 Jan, 2022 | 12:32 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பூப்பெய்தல் விருந்துபசார நிக்ழவொன்றினை அடுத்து, வெலிகம கடலில் உறவினர்கள் சகிதம்  நீராடச் சென்ற இரு சிறுமிகள் கடலலையால் அடித்து செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Articles Tagged Under: நீரில் மூழ்கி பலி | Virakesari.lk

12 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். காணாமல் போயுள்ள சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இதனிடையே இந்த சம்பவத்தில் அலையினால் அடித்து செல்லப்பட்ட  14 வயது சிறுமி ஒருவரும் 21 வயது யுவதி ஒருவரும் கடற் கரையிலிருந்த இளைஞர்களால் காப்பாற்றப்பட்டு, வெலிகம - வலான அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் உடனடியாக அவர்கள் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக  வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

 தற்போது காணாமல் போயுள்ள சிறுமிகளில் உள்ளடங்கும் ,  வெலிகம - மூதுகமுவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமி பூப்பெய்தியை கொண்டாடும் விதமாக அவர்களது வீட்டில் விருந்துபசார நிகழ்வொன்று நடந்துள்ளது.

அதில்  பங்கேற்ற உறவினர்களும் நண்பர்களுமாக இணைந்து கெப் வண்டி ஒன்றில் வெலிகம கடலுக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

 இதன்போதே குளித்துக்கொண்டிருக்கையில், இராட்சத அலையொன்றினால், 3  சிறுமிகளும் யுவதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 இவ்வாறான நிலையிலேயே இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் சிறுமிகள் இருவர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன இருவரையும் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42
news-image

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு...

2025-03-24 11:18:43
news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2025-03-24 10:16:56
news-image

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

2025-03-24 10:25:37
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்!...

2025-03-24 10:05:01
news-image

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி...

2025-03-24 09:50:15
news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42