சீனாவில் இருதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றில் அதிசயத்தக்க அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது குவான் என்று அழைக்கப்படும் 24 வயது நபருக்கு மாற்று இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதற்காக மாற்று இருதயம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த மற்றொருவர் உடலிலிருந்து இருதயம் அகற்றப்பட்டு 24 வயது குவான் உடலில் பொருத்தப் படவேண்டும். ஆனால் தானம் அளித்தவர் உடலிலிருந்து இருதயம் அகற்றப்பட்ட போது அதன் இயக்கம் நின்று போனது. ஆனால், மருத்துவர்கள் இருதயம் தேவைப்படும் நபருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையையும் செய்து முடித்தனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் நம்ப முடியாதபடிக்கு 7 மணிநேரம் கழித்து நின்று போன இருதயம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் இந்த அதிசயம் நடந்ததை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய டாக்டர் ஹுவாங் வர்ணிக்கும் போது, “6 மணி நேரங்களுக்கும் அதிகமாக இயங்காதிருந்த இருதயத்தை மீண்டும் இயக்க வைப்பது முடியாத காரியம். இது ஒரு அதிசய நிகழ்வு என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM