மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்வெவ பகுதியில் 15 கிரோம் ஹெரோயின் சந்தேகத்திக்கிடமான கூரிய ஆயுதங்கள் மற்றும் புலியின் தோல் என்பவற்றுடன் மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதின்போது சந்தேக நபர்களிடமிருந்து 146,000 ரூபா ரொக்க பணமும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 41 - 55 வயதுடைய பிலிச பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கிட்டத்தட்ட 50 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் குறித்த குழுவினரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.