மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

புத்தளம், கல்லடி பகுதியில்  லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குருணாகலில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியுடன் கல்லடி பகுதியிலிருந்து ஆனமடுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டதுடன் லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிராம்பையடி சின்ன நாகவில்லு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் விபத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்தனர். 

லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.