தரம் 13 உயர்தர வகுப்புகளின் இறுதி நாளில் பிரியாவிடை நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என உயர்தர  மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

பரீட்சை அனுமதிப்பத்திரங்களை கையளித்த பின்னர் மாணவர்களை எக்காரணம் கொண்டும் பாடசாலைகளில் இருக்க அனுமதி வழங்க வேண்டாம் என்றும் அவர் சகல பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மாணவர்கள் ஒன்றிணைவதன் மூலம் வைரஸ் ‍அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதை கருத்திற் கொண்டே இந்த தீருமானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மசேன சுட்டிக்காட்டினார்.

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.