உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு அச்சம் அதிகரித்துள்ளதால், தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களில் குடும்ப உறவினர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், அத்தியாவசியத் தூதரக ஊழியர்களை வெளியேறவும் அனுமதி வழங்கியுள்ளது.

US embassy in Kyiv

"ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியான அச்சுறுத்தலை" மேற்கோள் காட்டி, "உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்கள் வணிக அல்லது பிற தனிப்பட்ட போக்குவரத்து விருப்பங்களைப் பயன்படுத்தி இப்போது ‍அங்கிருந்து புறப்படுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று வெளியுறவுத்துறை அந்த ஆலோசனையில் சுட்டிக்கட்டியுள்ளது.

தற்போதைய பதற்றம் மற்றும் "அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான துன்புறுத்தல் சாத்தியம்" காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு மக்கள் பயணிக்க வேண்டாம் என்றும் வெளியுறவுத்துறை எச்சரித்தது.

மேலும் ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன என்றும் வெளியுறவுத்துறையின் ஆலோசனையில் கூறப்படுகின்றது.

ரஷ்யா தற்போது உக்ரைன் எல்லைக்கு அருகில் 100,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. எனினும் உக்ரைன் மீது படையெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களை ரஷ்யா மறுத்துள்ளது.