( எம்.எப்.எம்.பஸீர்)

கண்னாடித் துண்டொன்றினால் கழுத்தருத்து இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொழும்பின் புற நகர் பகுதியான  கடவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. 

காதல் விவகாரம்!! 22 வயது யுவதி கழுத்தறுத்து கொலை!! – படங்கள், வீடியோ |  www.theevakam.com

கடவத்தை -  அன்றூஸ் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள  வீடொன்றின்  வாடகைக்கு தங்குமிடமாக வழங்கப்படும் அறையொன்றில் இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவத்தில்  கடவத்தை - கோனஹேன பகுதியைச் சேர்ந்த ராஜு மதுசங்க எனும் 20 வயதான இளைஞன் படு காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலை தொடர்பில், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கண்ணாடித் துண்டுடன் 19 வயதான இளைஞன் ஒருவரை கடவத்தை பொலிசார் கைது செய்துள்ளனர். சிறுமி ஒருவருடன் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கும், சந்தேக நபருக்கும் இருந்த காதல் தொடர்பே கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

 இந்த கொலை தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

 இந்த கொலை சம்பவமானது இடம்பெற்ற அன்றூஸ்  குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வீட்டில்,  சிறுமி ஒருவர் தங்கியிருந்துள்ளார். சிறுவர் நிலையமொன்றிலிருந்துள்ள அவர், அங்கிருந்து தப்பி வந்து குறித்த தங்கு விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

 இந் நிலையில் நேற்று கடவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ள இசை நிகழ்ச்சியொன்றினை காண அச்சிறுமி சென்றுள்ளதுடன் அங்கு வைத்து, தனது முதல் காதலனான 20 வயதுடைய இளைஞனை அவர் சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே அறிமுகம் மீள புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இசைக் கச்சேரி முடிந்து இருவரும் சிறுமியின் தங்கும் அறைக்கு சென்றுள்ளனர்.  அங்கு இருவரும் ஒரே அறையில் இருந்துள்ள நிலையில், விடயம் 19 வயதான 2 ஆம் காதலனுக்கு தெரியவந்துள்ளது.

 அதனையடுத்தே, இன்று  (23) அதிகாலை 3.00 மணியளவில் சந்தேக நபரான 19 வயது இளைஞன் அன்றூஸ்  குறுக்குத் தெரு, தங்கு விடுதிக்கு சென்றுள்ளார்.

 இதன்போது கதவை திறக்குமாறு  தன் காதலியான சிறிமியிடம்  இளைஞன் கோரியுள்ள நிலையில், அதற்கு சிறுமி மறுத்துள்ளார்.

 இதன்போது, அறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள் நுழைந்துள்ள 19 வயது சந்தேக நபரான காதலன்,  சிறுமி அவளது  முதல் காதலனுடன் இருப்பதைக் கண்டு உடைந்த கண்னாடி துண்டினால் அக்காதலனின் கழுத்துப் பகுதியை வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே படுகாயமடைந்த 20 வயதான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிசார் கைதுச் செய்யப்பட்டுள்ள 19 வயது இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், சிறுமியும் பொலிஸ் பொறுப்பில் எடுத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.