மட்டக்களப்பில் 8 கிலோ மான் இறைச்சியை விற்பனைக்கு எடுத்துச் சென்ற இரு இளைஞர்கள் கைது 

Published By: T Yuwaraj

23 Jan, 2022 | 05:07 PM
image

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு வியாபாரத்துக்காக 8 கிலோ மான் இறைச்சியை  முச்சக்கரவண்டி ஒன்றில்  எடுத்துச் சென்ற இருவரை வவுணதீவு பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாக வவுணதிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவினுருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் வவுணதீவு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் ஆயித்தியமலை வவுணதீவு வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ மான் இறைச்சியுடன் இருவரை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 26, 24 வயதுடையவர்கள் எனவும் ஆயித்தியமலை பிரதேசத்தில் இறைச்சியை வாங்கி மட்டக்களப்பு நகரில் விற்பனை செய்துவருவதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்...

2023-03-20 14:36:50
news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42
news-image

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பாலம் திருத்தப்படாமையால் மக்கள்...

2023-03-20 12:19:55
news-image

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

2023-03-20 12:10:11
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் விடுதியில்...

2023-03-20 12:52:07
news-image

இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் பலி...

2023-03-20 11:48:34
news-image

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாவை பெண்கள் சக்தியே...

2023-03-20 13:18:53
news-image

பதுளை - பசறையில் 40 அடி...

2023-03-20 12:21:02