பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம் 

By T Yuwaraj

23 Jan, 2022 | 06:12 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ,   ஊடகங்களை கையாள்வதில்  சற்று பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையிலும், அண்மையில் அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் சமூகத்தில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான நிலையிலும்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 48 பேருக்கு இடமாற்றம் | Virakesari.lk

 

இந் நிலையில்,  பொலிஸ் பேச்சாளர் பதவியை தற்போது குற்றம் மற்றும் போக்குய்வரத்து பிரிவின் பிரதானியாக பணியாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு  மேலதிக பதவியாக கையளிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.  

பொலிஸ் பேச்சாளர் பதவியில் ஐந்துமுறை கடமையாற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரி எனும் ரீதியில் இந்த அவதானம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. 

எவ்வாறாயினும் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவின் வேலைப் பளுவுக்கு மத்தியில் அவரிடம் மற்றொரு சுமையை சுமத்துவதைவிட, அஜித் ரோஹணவின் நேரடி கட்டுப்பாட்டில் புதியதொரு பொலிஸ் பேச்சாளரை அறிமுகம் செய்வது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகத்தின் அவதானம் திரும்பியுள்ளது.

 பொலிஸாருக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான தொர்புகளை வலுப்படுத்தும் நோக்கில்  உரிய ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவும்  தீர்மானித்துள்ள நிலையில் அது குறித்து நடவடிக்கைகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை...

2022-12-02 16:44:44
news-image

கபூரியா மத்ரஸா விவகாரம் : 'வக்பு'...

2022-12-02 16:51:09
news-image

பல்கலைக்கழகத்திற்கு 44,000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை...

2022-12-02 16:18:11
news-image

ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில்...

2022-12-02 15:20:16
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2022-12-02 14:57:28
news-image

ஒதியமலை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல்...

2022-12-02 15:21:09
news-image

பொல்பித்திகமவில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை !

2022-12-02 14:45:00
news-image

பன்னலயில் பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள்...

2022-12-02 14:33:00
news-image

15 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம்...

2022-12-02 13:44:58
news-image

விபசார நடவடிக்கைக்காக ஓமானுக்கு இலங்கைப் பெண்கள்...

2022-12-02 13:39:28
news-image

பாராளுமன்றத்தில் தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை...

2022-12-02 14:51:46
news-image

10 மாதங்களில் 12,000 சமூக ஊடகங்கள்...

2022-12-02 13:28:32