(நெவில் அன்தனி)
இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் அதிகூடிய பணப்பரிசை வாரி வழங்கிய கால்பந்தாட்ட விருது விழாவும் 1995 பிறிஸ்டல் சார்க் தங்கக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சம்பியனான இலங்கை அணி வீரர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் கோட்டே மொனார்க் இம்ப்பீரியல் மண்டபத்தில் கோலாகலமாக நடந்தேறியது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரின் 'கால்பந்தாட்டத்தின் மீள் ஆரம்பம்' என்ற கருப்பொருளை மெய்ப்பிக்கும் வகையில் இந்த இரண்டு நிகழ்வுகளும் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மொத்தமாக 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த இவ் வைபவத்தில் தேசிய வீரர்களுக்கு வர்ண விருதுகளும் வழங்கப்பட்டன.
சம்பத் பெரேரா தலைமையில் 1995 பிறிஸ்டல் சார்க் தங்கக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை சம்பியனாகி 25 வருடங்கள் பூர்த்தியானதை (2020) முன்னிட்டு அவ்வணியில் இடம்பெற்ற வீரர்களும் பயிற்றுநர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அவர்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்களுடன் தலா ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.
கடந்த சில வருடங்களாக தேசிய அணியில் இடம்பெற்ற 23 வீரர்களுக்கு வர்ண விருதுகளுடன் கடந்த வருட பிற்பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதி கிண்ண சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை அணியினருக்கு ஒரு கோடி ரூபா பணப்பரிசும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இவற்றைவிட அங்குரார்ப்பண சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் சம்பியனான களுத்துறை புளூ ஸ்டார் கழகம் உட்பட சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய 10 கழகங்களுக்கும் மொத்தம் 2 கோடியே 35 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.
சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த புளூ ஸ்டார் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணம், தங்கப் பதக்கங்கள், 50 இலட்சம் ரூபா பரிசுப் பணத்துடன் 4 விசேட விருதுகளும் கிடைத்தன.
இந்த சுற்றுப் போட்டியில் தனிநபருக்கான அதிகூடிய 10 கோல்களைப் போட்ட புளூ ஸ்டார் கழக வீரர் ஷெனால் சந்தேஷுக்கு தங்கப் பாதணி விருது வழங்கப்பட்டது. அத்துடன் சுற்றுப் போட்டியின் பெறுமதிமிக்க வீரருக்கான தங்கப் பந்து விருதையும் ஷெனால் சந்தேஷ் வென்றெடுத்தார்.
தீர்மானமிக்க புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் புளூ ஸ்டார் கழகத்துக்கு வெற்றி கோலை போட்டுக் கொடுத்த மொஹமத் இஹ்சான், வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்றெடுத்தார்.
புளூ ஸ்டார் கழகத்தை சம்பியன் ஸ்தானத்துக்கு வழிநடத்திய பயிற்றுநர் இராஜமணி தேவசகாயம் (தேவா) அதி சிறந்த பயிற்றுநருக்கான விருதை தனதாக்கிக்கொண்டார்.
புளூ ஸ்டார் கழகத்தின் பயிற்றுநர் பதவியைப் பொறுப்பேற்ற முதல் சந்தர்ப்பத்திலேயே அதி சிறந்த பயிற்றுநர் விருதை வென்ற பெருமை தேவாவை சாருகின்றது.
இந்த சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சீ ஹோக்ஸ் கழகத்தின் உதயங்க பெரேரா அதிசிறந்த கோல்காப்பளருக்கான தங்கக் கையுறை விருதை சொந்தமாக்கிக்கொண்டாhர்.
சுப்பர் லீக் பணப்பரிசுகள் வருமாறு
சம்பியன் - புளூ ஸ்டார் 50 இலட்சம் ரூபா
2ஆம் இடம் - சீ ஹோக்ஸ் 35 இலட்சம் ரூபா
3ஆம் இடம் - கலம்போ எவ்சி 27 இலட்சத்து 50,000 ரூபா
4ஆம் இடம் - றினோன் 25 இலட்சம் ரூபா
5ஆம் இடம் - அப்கன்ட்றி லயன்ஸ் 22 இலட்சத்து 50,000 ரூபா
6 ஆம் இடம் - ரெட் ஸ்டார் 20 இலட்சம் ரூபா
7 ஆம் இடம் - டிபெண்டர்ஸ் எவ்சி 17 இலட்சத்து 50,000 ரூபா
8 ஆம் இடம் - நியூ யங்ஸ் 15 இலட்சம் ரூபா
9 ஆம் இடம் - ரட்ணம் 12 இலட்சத்து, 50,000 ரூபா
10ஆம் இடம் - புளூ ஈக்ள்ஸ் 10 இலட்சம் ரூபா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM