மட்டக்களப்பில் கோர விபத்து ; தந்தை தலைநசுங்கி பலி - மகன் படுகாயம்

By T Yuwaraj

23 Jan, 2022 | 11:25 AM
image

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்னால் நேற்று சனிக்கிழமை (22)  மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், தந்தை தலை நசுங்கி உயிரிழந்ததுடன் மகன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் ஆரையம்பதி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி தந்தையும் மகனும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது பிக்கப் வாகனம் மோதிவிட்டு தப்பியோடியுள்ளது. பிக்கப் மோதிய வேகத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த கனரக நெல் அறுவடை செய்யும் இயந்தரத்தினுள் மோட்டார் சைக்கிள் சிக்கி தந்தை  நசுங்குண்டு ஸ்தலத்திலேயே பலியானார்.

இதையடுத்து படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காத்தான்குடி பொலிசார் மேலதிக விசபரணைகளை மேற்கொண்டுள்ளனர்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

2022-11-28 16:45:50
news-image

காரை நகரில் நில அளவை மக்களின்...

2022-11-28 16:38:14
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும்...

2022-11-28 16:31:58
news-image

2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக...

2022-11-28 16:34:19
news-image

மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக...

2022-11-28 16:29:49
news-image

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை...

2022-11-28 16:28:37
news-image

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு மன நோயை...

2022-11-28 16:02:34
news-image

வங்கி ATM அட்டைகள் மூலம் பண...

2022-11-28 15:55:24
news-image

மத்திய வங்கி ஆளுநர் மீது ஜனாதிபதியின்...

2022-11-28 15:41:55
news-image

மக்கள் போராட்டம் ஓயவில்லை என்பதை ராஜபக்ஷக்கள்...

2022-11-28 15:02:21
news-image

இலங்கைக்கு நாங்கள் உதவி வழங்கிய பின்னர்...

2022-11-28 14:52:06
news-image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்...

2022-11-28 14:58:30