நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கான தேர்வுக்கு தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள 94-வது ஒஸ்கார் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்ட தகுதிப் பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக ஜெய்பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் கடந்த ஒஸ்கார் தேர்வு பட்டியலில் இருந்தது இங்கு நினைவு கூரத்தக்கது.