(எம்.எப்.எம்.பஸீர்)
வெள்ளவத்தை , தெஹிவளை, பம்பலபிட்டி, காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பின் கடல் பரப்பில் அண்மைக் காலமாக கரையை அண்மித்து முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பை சூழவுள்ள மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளில் முதலைகளின் நடமாட்டத்தை தடுப்பதற்காக பொல்கொட ஆறு மற்றும் பேர வாவி ஆகியன கடலுடன் சங்கமிக்கும் பகுதிகளை வலைகள் கொண்டு மூடுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
பொல்கொட ஆற்றில் உள்ள முதலைகளும், தியவன்னா ஓயாவில் உள்ள முதலைகளும் பேர வாவி ஊடாக கடலுக்கு வருகின்றன.
கணிசமான எண்ணிக்கையிலான முதலைகள் இந்த கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சுற்றித் திரிவதாகவும் அவை தொடர்ந்து கடலுக்கு வந்து செல்வதாகவும் அத்திணைக்கள தகவல்கள் சுட்டிக்காட்டின.
இவை நீண்ட நாட்களாக நடந்து வருவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் பொல்கொட ஆறு மற்றும் பேர வாவி ஆகியன வலைகள் கொண்டு மறைக்கப்பட்டால், சில சமயம் முதலைகள் தரைப் பகுதி ஊடக கடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கால்வாய்கள், ஏரிகளில் மற்றும் வவைகளில் உள்ள முதலைகள் கால்வாய்களில் கொட்டப்படும் பூனைகள் மற்றும் நாய்களின் சடலங்களை உணவாக கொள்வதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் பேர வாவி ஊடாக வெள்ளவத்தை,தெஹிவளை கடற்பரப்புக்குள் வரும் முதலைகள் கடற்கரையை அண்மித்து இருப்பதால் அக்கடற்கரையை பயன்படுத்தும் பொது மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்க்கொண்டுள்ளனர். அண்மையில் தெஹிவலை கடலில், முதலையின் தாக்க்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM