நடிகை பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளது.

பிரியங்கா சோப்ரா தமிழில், விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இப்போது ஹொலிவூட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார்.

பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு மதங்களின் வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், தற்போது வாடகைத் தாய் மூலம் இத்தம்பதி பெற்றோராகியுள்ளனர். இது குறித்து இருவரும் தங்களின் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதில், "நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். அதே வேளையில் நாங்கள் எங்களின் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரம் கருதி யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். மிக்க நன்றி" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.