கனேடிய அரசாங்கத்தின் பயண வழிகாட்டலில் இலங்கை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் - வெளிவிவகார அமைச்சு

22 Jan, 2022 | 03:03 PM
image

(நா.தனுஜா)

அண்மையில் இலங்கை தொடர்பில் கனேடிய அரசாங்கத்தினால் அந்நாட்டுப்பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட பயண வழிகாட்டலில் தவறானதும் நாட்டின் தற்போதைய நிலைவரத்தைப் பிரதிபலிக்காததுமான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அத்தியாவசியப்பொருட்களின் கிடைப்பனவை உறுதிசெய்வதற்குமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகவும் மோசமடைந்து வருவதாகவும் மருந்துப்பொருட்கள், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் கனேடியப்பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த வாரம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. 

இந்நிலையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

இலங்கையின் உண்மை நிலைவரத்தைப் பிரதிபலிக்காத தவறான தகவல்களை உள்ளடக்கி கடந்த  13 ஆம் திகதி வியாழக்கிழைமை கனடாவினால் வெளியிடப்பட்ட பயண வழிகாட்டல்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.

நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு நிலைவரம், பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டவர்களைத் துன்புறுத்துதல் என்பன தொடர்பில் தவறான தகவல்கள் இப்பயண வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட சவால்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது உரியவாறான சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாக பொதுச்சேவை, வணிக மற்றும் கல்விச்செயற்பாடுகள் உள்ளடங்கலாக அனைத்துத் துறைகளும் எவ்வித இடையூறுகளுமின்றி வழமைபோன்று இயங்கிவருகின்றன. 

நாடளாவிய ரீதியில் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டைப்பெற்ற அதேவேளை,  சுமார் 90 சதவீதமான மக்கள் இரண்டு கட்டத்தடுப்பூசிகளைம் பெற்றுள்ளனர். 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சர்வதேச ரீதியிலான பயணங்களைப் படிப்படியாக இயல்புநிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் கனடா உள்ளடங்கலாக ஏனைய சர்வதேச நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதரவேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.  

அனைத்து அத்தியாவசியப்பொருட்களினதும் கிடைப்பனவை உறுதிசெய்வதிலும் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. 

தேசிய பாதுகாப்பு நிலைவரத்தைப் பொறுத்தமட்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் குறைந்தபட்ச இராணுவப்பிரசன்னம் பேணப்பட்டுவருகின்றது. 

பல்லின கலாசாரங்களைக் கொண்ட இலங்கையானது பல்வேறு சமூகத்தினரும் ஒன்றிணைந்து சமாதானத்துடன் வாழ்ந்துவருகின்ற பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றது. 

இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதன் ஊடாக ஒன்றுகூடல் சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. 

இந்த ஆர்ப்பாட்டங்கள் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்கு எவ்வகையிலும் தடையாக அமையாது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44