இன ரீதியில்  நாம்  தமிழர்களாக இருந்தாலும் இலங்கையர்களென கூறிக்கொள்ளவே விரும்புகின்றோம் - ஜீவன் தொண்டமான்,

22 Jan, 2022 | 03:03 PM
image

(ஆர்.யசி)

இன ரீதியாக நாம் மலையக தமிழர்களாக இருந்தாலும் கூட எமது அடையாளமாக எம்மை இலங்கையர்கள் என்றே கூறிக்கொள்ளவே விரும்புகின்றோம். 

எமக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கினால் மட்டுமே சமுதாயத்துடன் ஒன்றிணைய முடியும் என சபையில் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எம்மை பிரித்து பேசினால் நாம் எந்த நாட்டிற்குத்தான் செல்ல முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீது பல விமர்சனங்களை முன்வைத்தனர், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட இதுவரை காலமாக அவர் நாட்டை எவ்வாறு கொண்டு சென்றுள்ளார் என்பதை அவதானிக்க வேண்டும். 

நாடு பொற்காலத்தில் இருந்த வேளையில் நாம் ஆட்சியை கையில் எடுக்கவில்லை. மிகவும் மோசமாக இருந்த நேரத்தில் தான் நாம் ஆட்சியை கையில் எடுத்தோம். 

அரசியல் பிரச்சினைகள் மட்டுமல்ல கொரோனாவிற்கும் நாம் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. 

எனினும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம். இன்று நாட்டில் 85 வீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

உரப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றது. சகலரதும் கருத்துக்களுக்கு செவி மடுத்து தூரநோக்கு சிந்தனையில் தீர்மானம் எடுக்கின்றார். 

கல்வி மற்றும் தொழிநுட்பம் குறித்து ஜனாதிபதி அதிக கவனம் செலுத்துகின்றார்.

மலையக தமிழர்களை பற்றி ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் எதனையும் தெரிவிக்கவில்லை என கூறுகின்றனர். மலையக மக்கள் குறித்து ஏன் பேச வேண்டும் என்பதே எனதும் கேள்வியாகும். 

நாமும் இலங்கை பிரஜைகள் தானே, வேறுநாட்டு பிரஜைகள் இல்லையே. 

இன ரீதியாக நாம் மலையக தமிழர்களாக இருந்தாலும் எமது அடையாளமாக நாம் இலங்கையர்கள் என்றே கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எமக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கினால் மட்டுமே சமுதாயத்துடன் ஒன்றிணைய முடியும்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் ஒரு சிறுமி உயிரிழந்த வேளையில் இரண்டு நாட்களாக சகலரும் பேசினார்கள், இன்று அது குறித்து சகலரும் மறந்துவிட்டனர், ஆனால் நாங்களே இன்றுவரை அந்த சிறுமிக்காக வழக்கு நடத்திக்கொண்டுள்ளோம். 

மலையகத்திற்கு தேசிய பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தாலும் இந்த அரசாங்கமே அதனை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

பத்து மாவட்டங்களுக்கு நகர பல்கலைக்கழகங்கள்  உருவாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.வீடுகள் அமைப்பது முன்னேற்றம் அல்ல, கல்வியை வழங்க வேண்டும், அதுவே எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும். 

எத்தனை காலத்திற்கு தான் நாமும் தோட்டங்களில் வேலை செய்வது. எனவே இன்று புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் இந்தியா எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

இந்தியா எமக்கு கைகொடுப்பது எமது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையிலேயாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12