நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 17 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15, 272 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் பதிவான 17  மரணங்களில் 13 ஆண்களும் 4  பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களுள் 10  பேர் 60 வயதிற்கு மேற்பட்டோராவர்.

அதேவேளை இதுவரையான காலப்பகுதியில் அடையாளங்காணப்பட்ட தொற்றாளர்களில் 569,043 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன் 15,065 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.