கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி விபத்து : சாரதி படுகாயம், கொரோனா தொற்றும் உறுதி

By T Yuwaraj

21 Jan, 2022 | 08:15 PM
image

கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், அவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்றும் உறுதியாகியுள்ளது.

பேருந்து ஒன்றுக்கு இடம் கொடுக்க முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

குறித்த சம்பவத்தில். முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி குளத்தின் துருசு பகுதியில் உள்ள பாலத்தில் விழுந்துள்ளது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி  சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியை சேர்ந்த தியாகராச சிவநாதன் என்ற 54 வயதுடையவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுமுன் எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவருடன் பயணித்த மற்றொருவரை காணவில்லை என சாரதியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பொதுநலவாய அமைப்பின்...

2023-01-26 13:18:06
news-image

தென் கொரிய தூதுவர் - அமைச்சர்...

2023-01-26 22:06:56
news-image

தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில்...

2023-01-26 16:36:14
news-image

தேர்தலுக்கு தயாரில்லை என்பதை ஜனாதிபதி மக்களுக்கு...

2023-01-26 11:37:42
news-image

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் !

2023-01-26 14:18:06
news-image

வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சாணக்கியனின் அழைப்பில்...

2023-01-26 17:30:34
news-image

புதிய வரி அறவீட்டு முறைக்கு எதிர்ப்பு...

2023-01-26 22:07:49
news-image

இலங்கையின் வளர்ச்சியில் பிரதான பங்காளியாக இந்தியா...

2023-01-26 16:24:24
news-image

படகில் 49 கிலோ கஞ்சா கடத்திய...

2023-01-26 16:05:57
news-image

கடன்வழங்கிய முக்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம்...

2023-01-26 17:00:45
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தொழில்...

2023-01-26 16:09:08
news-image

10 பொலிஸ் அதிகாரிகள் பிரதிப் பொலிஸ்...

2023-01-26 17:01:10