தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்த இந்தியாவுடன் இணைந்து முயற்சி - நாமல்

Published By: Digital Desk 3

21 Jan, 2022 | 07:58 PM
image

(ஆர்.யசி)

தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க முயற்சிக்கின்றோம். இப்போதும் அதற்கான ஒத்துழைப்பை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக் ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21)  இடம்பெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு சவால் விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் வைரஸ் காரணமாக எமக்கு வரவிருந்த வருவாய்கள் முடக்கப்பட்டன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறைவடைந்தது, சுற்றுலா முழுமையாக தடைப்பட்டது. இவ்வாறான நிலையில் தான் தடுப்பூசியை வழங்கியதன் மூலமாக இந்த சவால்களை வெற்றிகொள்ள முடிந்துள்ளது.

இன்று சுற்றுலாத்துறை பலமடைந்து வருகின்றது. தென்னாசிய நாடுகளில் முதல் நாடாக கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை நடந்தியுள்ளோம். எனினும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. 

அரச வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளது. மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபா நிவாரணம் வழங்க வேண்டியுள்ளது. மூன்று சந்தர்ப்பங்களில் நிவாரண பணம் வழங்கியுள்ளோம். இலவசமாக தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. இதற்கான செலவுகளை  அரசாங்கம் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

உலக நாடுகள் பல இன்றும் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றன, எம்மை போன்றே பல நாடுகள் இந்த சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன. 

இறக்குமதியை முன்னெடுக்க முடியாது பல நாடுகள் தடுமாறிக்கொண்டுள்ளன. நாமும் இதே சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இன்று நாட்டில் மீண்டும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது. அதன் மூலமே வேலைவாய்ப்புகளை பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும். அதுவே எமது இலக்காகும். 

நட்பு நாடுகளுடன் நாம் நெருக்கமாக செயற்பட்டுக்கொண்டுள்ளோம். வெவ்வேறு நாடுகளின் தலைவர்கள் அமைச்சர்கள் எமது நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மக்கள் கஷ்டத்தில் வாழ்கின்றனர், கிராமங்களில் பிரச்சினைகள் உள்ளன. கொவிட் வைரஸ் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம்.

எனினும் விரைவில் இந்த சவால்களில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதேபோல் டிஜிட்டல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து அபிவிருத்தியின் பக்கம் நாட்டை கொண்டு செல்கின்றோம்.

மக்களுக்கு தமது கடமைகளை இலகுபடுத்த டிஜிட்டல் தளத்தை பலப்படுத்தி வருகின்றோம். 30 மாதங்களுக்குள் டிஜிட்டல் வேலைத்திட்டங்களை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

அதேபோல் இந்தியாவுடன் இணைந்து தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கின்றோம். இப்போதும் அதற்கான ஒத்துழைப்பை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. 

கடவுச்சீட்டு, அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு கோப்பாக மாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இது குறித்த சட்ட திட்டங்களை அமைச்சரவையில் அங்கீகரித்துள்ளோம். விரைவில் பாராளுமன்றத்தில் இதனை முன்வைப்போம்.   

அதேபோல் இன்று நாம் சகலரும் தேசிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இதனை சகலரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம், அதன் பின்னர் தேர்தலில் எமது அரசியலை முன்னெடுக்க முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப...

2024-10-09 16:55:06
news-image

ஞானசாரதேரரை கைதுசெய்வதற்கு பிடியாணையை பிறப்பித்தது நீதிமன்றம்

2024-10-09 21:51:52
news-image

வெளிப்புற பொறிமுறையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2024-10-09 21:36:29
news-image

மனித உரிமை பேரவை தீர்மானம் -...

2024-10-09 21:24:15
news-image

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித...

2024-10-09 19:59:34
news-image

ஜனாதிபதி - ஜேர்மன் தூதுவர் சந்திப்பு;...

2024-10-09 18:46:30
news-image

கண்டி விகாரமகாதேவி பெண்கள் கல்லூரியின் மாணவிகள்...

2024-10-09 18:33:15
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் தென் கொரிய தூதுவர்;...

2024-10-09 18:28:22
news-image

ஜனாதிபதி - தாய்லாந்து தூதுவர் இடையே...

2024-10-09 18:25:05
news-image

கெப் வாகனம் மோதி ஒருவர் பலி...

2024-10-09 18:51:48
news-image

கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று...

2024-10-09 18:21:43
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2024-10-09 19:28:03