2022 ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெறுகின்றது.
அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்ட் ஓவல் மைதானத்திலும் முறையே நவம்பர் 9 மற்றும் 10 திகதிகளில் நடைபெறும்.
இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் திகதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடத்தகுதி பெற்றுள்ளன.
அதேசமயம் நமீபியா, ஸ்கொட்லாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை முதன்மைச் சுற்றுக்கு முந்தைய தகுதிச் சுற்றுகளில் விளையாடுகின்றன.
இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM