மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுக்கயில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு | Virakesari.lk

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், படுகாயமடைந்த 46 வயதுடைய நபர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மிதிகம  பொலிசார் மேலும் தெரிவித்தனர்.