லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இரு பெண் கள நடுவர்கள்

Published By: Digital Desk 3

21 Jan, 2022 | 05:21 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஓமானில் நேற்று ஆரம்பமான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில்  பெண் நடுவர்கள் இருவர் கள நடுவர்களாக செயற்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். இப்போட்டியில் உமைரா பராஹ் என்ற பாகிஸ்தானியரும், ஷுப்தா போசலே என்ற இந்தியரும் ஒன்றாக பணியாற்றியமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

உமைரா பராஹ் என்பவரே பாகிஸ்தானின்  முதலாவது பெண் கிரிக்கெட் நடுவராவார். பாடசாலை ‍ஹொக்கி அணியில் இடம்பிடித்திருந்த உமைரா,  பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டித் தொடரில் சிறந்த ஹொக்கி வீராங்கனையாக தெரிவானார். 

இதன் பின்னர் பாகிஸ்தான் ரெயில்வே ஹொக்கி அணி சார்பாகவும் விளையாடி வந்தார். பின்னர், விளையாட்டுத் துறை  நிர்வாகம் சம்பந்தமான கற்கை நெறிகளை கற்றுத் தேர்ந்ததுடன், கிரிக்கெட் நடுவருக்கான  பரீட்சைகளிலும் சித்தியடைந்து 2005  ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் நடுவராக பணியாற்றி வருகிறார். 

இவர் இதுவரை 170 க்கும் அதிகமான போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.

நடுவராக பணியாற்றுவது என்பது மிகுந்த சவாலான வேலையாகும். இந்நிலையில், கணவனை இழந்து வாடும் உமைரா பராஹ் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகுந்த சவால் மிக்கதாகவே விளங்குகிறது.

இதேவேளை, இப்போட்டியில் மற்றுமொரு களநடுவராக பணியாற்றி ஷுப்தா போசலே இந்தியாவின் மிக இளவயதில் கிரிக்கெட் நடுவராக நியமனம் பெற்ற பெண் நடுவராக விளங்குகிறார். 

2011 ஆம் ஆண்டு  கிரிக்கெட் நடுவருக்கான பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலமான தனது 21 ஆவது வயதில் இந்தியாவின் மிக இள வயது பெண் கிரிக்கெட் நடுவாரானார். இதற்கு முன்னர், இந்தியாவின் மத்திய பிரதேச  மாநிலத்தின் 16 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி சார்பாக விளையாடியுள்ள இவர், கிரிக்கெட் பின்னணியை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவராவார்.

ஷுப்தா போசலேவின் தந்தையான அஜித் போசலே கிரிக்கெட் பயிற்றுநர் என்பதுடன், அவரது சிறிய தந்தையான சிறிகாந்த் போசலே ரஞ்சி கிண்ணத் தொடரில் விளையாடி வீரராவார். மேலும், அவரது  சகோதரரும் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். 

சமூகத்தில் பல பெண்கள் திருமணத்திற்கு பின்னர் தமது தொழில் துறைகளிலிருந்து விலகிவிடுகின்றனர். எனினும், எனது கணவரான  சுஜய் எனது நடுவர் பணியை தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு பெரும் உந்து சக்தியாக இருக்கிறார் என ஷுப்தா  போசலே கூறியுள்ளார்.

ஷுப்தா போசலே, இதுவரை 75 அதிகமான கிரிக்கெட் போடிகளுக்கு  நடுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43