(இராஜதுரை ஹஷான்)

அரசியல் ரீதியில் பலவீனமடைந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு பொதுஜன பெரமுனவே அரசியல் அந்தஸ்த்து வழங்கியது.

சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது .சுதந்திர கட்சியினரது செயற்பாடுகளில் அவதானத்துடன் உள்ளோம் என  சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கடுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றினைந்ததன் காரணமாக சுதந்திர கட்சியினை மக்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள்.

அரசியல் ரீதியில் பலவீனமடைந்த சுதந்திர கட்சிக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே அரசியல் அந்தஸ்த்தினை வழங்கியது. சுதந்திர கட்சியின் உறுப்பினர்களில் இருவர் அமைச்சு பதவிகளையும் மேலும் இருவர் இராஜாங்க அமைச்சு பதவியைனையும் வகிக்கிறார்கள்.

அரச வரப்பிரசாதங்களை முழுமையாக அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் காலங்களில் தனித்து போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திர கட்சியை தனித்து போட்டியிடுவமாறு தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டேன்.