பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று நேற்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது சரத் வீரசேகர சிகிச்சைகளுக்காக நாராஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார தரப்பினர் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.