Published by T. Saranya on 2022-01-21 14:48:41
இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவடையத் தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக அடுத்த வாரம், அதாவது எதிர்வருகிற 26 ஆம் திகதியுடன் ‘திட்டம்-பி’ யை அரசு கைவிடுகிறது.
அந்தவகையில், 27 ஆம் திகதி முதல் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் உயர்நிலை பாடசாலைகளில் மாணவர்களுக்கு நேற்று முதல் முகக்கவசம் கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல வீட்டில் இருந்து பணி செய்வது ரத்து செய்யப்படுகிறது. ஹோட்டல்கள், விடுதிகள், மதுபான சாலைகள், உணவகங்கள் திறக்கப்படுகின்றன.
அவற்றில் நுழைய தடுப்பூசி சான்றிதழோ அல்லது கொரோனா இல்லை என்ற சான்றிதழோ கட்டாயம் அல்ல என பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
அதேநேரம் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.