இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக கடந்த 06.03.2021 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில், இம்மாதம் 21 ஆம் திகதி வரை கொலைக் குற்றவாளியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பாக  உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

 முக்கிய சாட்சியான ஒருவரை ஏன் இவ்வளவு காலமும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தவில்லை என பொலிஸாரிடம் வினாவியதாகவும் பொலிஸார் மிக விரைவில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர் .

எட்டு மாதங்கள் கடந்தும் நாங்கள் அலைந்து திரிகிறோம் இராஜாங்க அமைச்சர் மௌனமாக இருப்பது வேதனையாக இருக்கின்றது.

அவருடைய வீட்டில் இருந்த  சிலரினால் எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர் இதற்கான நீதி கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.