கானாவில் பாரிய வெடிப்பு சம்பவம் - 17 பேர் பலி

21 Jan, 2022 | 01:24 PM
image

கானாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு சுரங்க நகருக்கு அருகில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கானாவில் பொகோசோ நகருக்கு அருகில் சுரங்க வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மோட்டார் சைக்கிள்  மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 60 பேர் வரை காயமடைந்துள்ளனர்.  அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர்  கோஜோ ஓப்போங் நக்ருமா தெரிவித்தார்.

500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் நாயகம் செஜி சாஜி அமெடோனு தெரிவித்துள்ளார்.

கானாவின் ஜனாதிபதி நானா அகுஃபோ-அடோ டுவிட்டர் பக்கத்தில் , 

நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவம் அவசரகால முயற்சிகளில் இணைந்துள்ளதாகவும், நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் குடியிருப்பாளர்களுக்கு விரைவான நிவாரணம்  பணியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,  இது உண்மையிலேயே சோகமான, துரதிர்ஷ்டவசமான  சம்பவம் என  அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாவது வெடிப்பைத் தவிர்க்க மற்றும் சம்பவ இடத்தைப் பாதுகாக்க பொலிஸார் மற்றும் இராணுவ நிபுணர்களின் குழு நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47